மதியம் திங்கள், ஜூலை 23, 2007

சேவை சமையல்குறிப்புப் போட்டி (Sevai Recipe Contest)

போட்டியை இன்னும் விரிவுபடுத்தி, மற்ற தளங்களில் விளம்பரங்களுடன், செய்ய முடிவு செய்திருப்பதால், காலவரையறை நீட்டிக்கப்பட்டுள்ளது. சேவைமேஜிக் இணையத்தளமும் ஆன்லைன் விற்பனையும் துவங்கியபின்னர் அங்கும்/இதே தளத்திலும் மறு அறிவிப்பு செய்யப்படும். அதுவரை பொறுத்து ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

(இதுவரை போட்டிக்கு வந்த ஒரே ஒரு குறிப்பும் தமிழில் இல்லை. எனவே ஏற்கனவே பங்கேற்றவர்கள் என்று யாரும் இல்லை. )

சேவை சமையல்குறிப்புப் போட்டி (Sevai Recipe Contest)

முழுத்தகவலுக்கு இங்கே வாருங்கள்

சேவைமேஜிக் காப்புரிமை (Patent) விவரம்

சேவைமேஜிக் ஒரு புதிய கண்டுபிடிப்பு. வழக்கமான பிரஷர் குக்கர்களில் நீராவியின் அழுத்தத்தில் உணவுப்பொருட்கள் வேகவைக்கப்படுகின்றன. இங்கே அதே நீராவியின் அழுத்தத்தை பயன்படுத்தி, வேகவைக்கப்பட்ட மாவை துளைகளின் வழியே பிழிந்து சேவையாகக் கிடைக்கவைக்கப்படுகிறது. இதன் மூலம் இலகுவாக சேவை தயாரித்துக் கொள்ளலாம்.

இந்தக் கண்டுபிடிப்பு 8-6-2001 தேதியிட்ட இந்தியக் காப்புரிமை (Patent) 201479-ஆல் பாதுகாக்கப்பட்டது.

மதியம் திங்கள், ஜூலை 16, 2007

வருக, வணக்கம்



அன்பு நண்பர்களே,

சேவைமேஜிக் வலைப்பதிவுக்கு உங்களை வரவேற்கிறோம். கோவை நியூஹோம் இன்னோவேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதுமையான சமையல் சாதனம் 'சேவைமேஜிக்' தானியங்கி சேவை குக்கர். சேவைமேஜிக் பற்றிய பல தகவல்களோடு சேவைமேஜிக்.காம் தளம் இன்னும் சில நாட்களில் பயனுக்கு வர இருக்கிறது. இந்த வலைப்பதிவு சேவைமேஜிக் பற்றிய தகவல்களை பலருக்கும் எடுத்துச் செல்லவும், உரையாடல்கள் வாயிலாக கருத்துப் பரிமாற்றத்துக்கும் வழிவகை செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.